Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

மே 13, 2021 05:21

கடலூர்: கடலூர் சிப்காட் தொழிற் சாலையில் அமோனியா பாய்லர் வெடித்த விபத் தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று  லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்க ளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதற்கான உரிய நிவாரணத்தை முதல்வர் அறிவிப் பார் என தொழிலாளர்துறை அமைச்சர் சிவி.கணேசன் தெரிவித்துள்ளார்.

கடலூர் முதுநகர் அருகே குடிகாடு பகுதியிலுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், பூச்சி மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற் சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தொழிற்சாலையின் உள்ளே தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பூச்சி மருந்துகளுக்கான மூலப் பொருள் கலக்கும் பாய்லர் திடீ ரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த புகை மூட்டத்தில் தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். 

இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று அங்கு மயங்கிக் கிடந்த தொழிலாளர்களை மீட்டு வெளியே கொண்டு வந்த ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சம்பவம் நடந்த இடத்தை பார்வை யிட்ட தொழிலாளர் துறை அமைச்சர் சிவி.கணேசன் அளித்த பேட்டியில், விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழக முதல்வருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டோருக்கான உரிய நிவாரணத்தை உடனடி யாக முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம்  ரூபாயும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்