Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 பேரின் உடலை சவக்கிடங்குக்கு கொண்டு செல்ல தாமதம்: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அச்சம்

மே 11, 2021 08:02

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 336-ஆக உள்ளது. மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 வார்டுகளில் 280 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதில், திங்கள்கிழமை நிலவரப்படி 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவரது உடலை அகற்றாமல் இரவுவரை படுக்கையிலேயே கிடத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இரவு ஒரு முதியவர் படுக்கையில் இருந்து கழிவறைக்குச் சென்றவர் அங்கேயே விழுந்து உயிரழந்தார். அவரது உடலையையும் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அகற்றாததாகக் கூறப்படுகிறது. 

இதனால், மற்ற படுக்கைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தாததால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். ஒருசிலர் கழிவறையில் முதியவர் இறந்து கிடந்ததை செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். கொரோனா சிகிச்சை வார்டுகளில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணியமர்த்தி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்