Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்பும் வங்கதேசம்

மே 01, 2021 05:45

இந்தியாவுக்கு அடுத்த வாரம் ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பப்பட உள்ளதாக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலாளர் மசூத் பின் மோமன் கூறும்போது, “மற்ற மருத்துவப் பொருட்களுடன் இந்தியாவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளும் அடுத்த வாரம் அனுப்பப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் தொற்றுக்கு ஆளானவர்களுக்குத் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் ரெம்டெசிவிர் நோய் எதிர்ப்பாற்றல் மருந்து அளிக்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்ப முடிவு செய்துள்ளன. இந்தியாவில் 1.8 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்