Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரிபுரசுந்தரி சமேத திருகோடீஸ்வரசுவாமி திருக்கோயில் சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீர்த்தவாரி

ஏப்ரல் 29, 2021 12:08

தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள, திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுகபைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது,

ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருத யுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதா யுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபர யுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில் வேத்ரவனம் (பிரம்பு) என்றும் திகழ்கிறது இத்தல இறைவனை மூன்று கோடி மந்திர தேவதைகளும், பிரமன், எமன் முதலான தேவர்களும், துர்வாசர், அகத்தியர் முதலான முனிவர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர் இத்தலத்தில் இறைவன் ஆணைக்கு இணங்க, நந்தியம்பெருமான் கொம்புகளால் உண்டாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது,

இத்தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோருக்கு எம பயம் கிடையாது, பிதுர் சாபம் நீங்கும், புத்திரபேறு கிட்டும், மனக்கவலை அகலும், குடும்ப நலம் பெருகும், துர்வாச முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தல அம்பிகை திருமாலாக காட்சியளித்ததாக வரலாறு.

இங்கு காவிரி நதி உத்தர வாஹிநியாக (வட காவேரியாக) பாய்ந்தோடும் பெருமை கொண்டது இத்தலம். மேலும் இங்கு அகத்திய முனிவரால் காவிரி மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கரையேற்று விநாயகர் அருள்பாலிக்கிறார் கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் எழுப்பப்பட்ட முதற்கற்கோயில் இதுவாகும், இங்கு துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடுக பைரவரை வழிபடுவோர் வறுமை நீங்கி, செல்வம் பெருகும், வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.

இத்தலத்தை போற்றி, திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் போற்றி பாடியுள்ளனர் இத்தகைய பெருமை கொண்ட இத்தலத்தில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2019ம் ஆண்டு  முதன் முறையாக சித்திரை பிரமோற்சவம் நடைபெற்றது கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக விழா நடைபெறவில்லை. 

நடப்பாண்டிற்காண சித்திரை பிரமோற்சவம்  கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அரசின் கொரோனா தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாள்தோறும் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் திருவீதியுலாவிற்கு பதிலாக பிரகார உலாவாக நடைபெற்றது,

விழாவின் விழாவின் 10ம் நாளான இன்று விநயாகப்பெருமான்  மூக்ஷிக வாகனத்திலும், திருக்கோடீஸ்வரர் சுவாமி, திரிபுரசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி  ரிஷப வாகனங்களிலும், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான்  மயில் வாகனத்தில் என  பஞ்சமூர்த்திகளும் நாதஸ்வர மேளதாளம் முழங்க, முக்கிய நிகழ்ச்சியாக சித்ரா பெளர்ணமி நன்னாளில் சிருங்கோத்பவ புஷ்கரணியில்
அஸ்திரதேவருக்கு, திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் அஸ்திரதேவருடன் சிவாச்சாரியார் திருக்குளத்தில் இறங்கி, மும்முறை முழங்கி எழ, தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது அப்போது அங்கிருந்த இருந்த பொதுமக்கள் கரைகளில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தலைப்புச்செய்திகள்