Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வயல்வெளியில் ஆளில்லா விமானம் மூலம் திரவ உரம் அடிக்கும் பணி செயல்விளக்கம் 

ஏப்ரல் 29, 2021 11:35

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கடிச்சம்பாடியில் அறிவியல் வளர்ச்சி ஒருபுறம், வேளாண் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை மறு புறம். இதனால் விவசாயத்தில் இயந்திரங்களின் பங்களிப்பு தற்போது அதிகமாக தேவைப்படுகிறது.

இந்நிலையில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளியில் இயற்கையாக கிடைக்கும் பால்,தயிர், நெய்,கரும்பு சாறு, மாட்டு சாணம் போன்ற பொருட்களால் தயாரித்த  பஞ்சகாவிய திரவ உரம் இன்று  கடிச்சம்பாடி கிராமத்தில் நெல் நடவு செய்யப்பட்ட வயலில் ஆளில்லா விமானம் மூலம் திரவம் தெளிக்கும் பணி நடைபெற்றது .
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 12 நிமிடத்தில் திரவ உரம்  அடிக்கப்பட்டது .
இந்த ஆளில்லா விமானத்தை கொண்டு விதை தூவுதல் | பூச்சி மருந்து அடித்தல் ,ரசாயன பூச்சிமருந்து, இயற்கை வழி பூச்சிமருந்து போன்ற பணிகளை பயன்படுத்த முடியுமென இந்த ஆளில்லா விமானத்தை வைத்துள்ள விவசாயி மற்றும் பொறியியல் பட்டதாரிவெங்கட்ராமன் தெரிவித்தார். விவசாய பணிகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒருபுறம் விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ,மறுபுறம் கிடைக்கும் ஆட்களுக்கு அதிகக் கூலி கொடுக்க வேண்டிய கட்டாயம் .

எனவே விவசாயத்திற்கு இயந்திர பயன்பாடு அவசியம் தேவைப்படும் நிலையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆளில்லா விமானத்தை சாதாரண விவசாயிகளால் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளதால் மத்திய மாநில அரசுகள் இதுபோல் ஆளில்லா விமானங்கள் வாங்க மான்யத்துடன் நிதி உதவி அளிக்கவேண்டும் என விவசாய சங்க நிர்வாகி விமலநாதன் தெரிவித்தார். ஆளில்லா விமானம் மூலம் இயற்கை வழி திரவ உரம் தெளிக்கும் பணியினை காண ஏராளமான விவசாயிகள் கடிச்சம்பாடி கிராமத்தில் குவிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஒரு ஏக்கர் பரப்பிற்கு பூச்சி மருந்து, திரவ வழி உரமிடுதல் போன்ற பணிகளுக்கு 500 ரூபாய் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக ஆளில்லா விமானம் வைத்திருக்கும் வெங்கட்ராமன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்