Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவுக்கு தேவையான அவசரகால உதவிகளை அமெரிக்கா வழங்கும் - ஜோ பைடன்

ஏப்ரல் 27, 2021 06:12

வாஷிங்டன்: உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் கடந்த சில நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது. உலக நாடுகளில் இல்லாத வகையில் நாள்தோறும் 3 லட்சத்திற்கு கூடுதலான பாதிப்புகள் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பை எதிர்கொள்வது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடியுடன் பேசினேன். கொரோனாவுக்கு எதிரான போரில் அவசரகால உதவிகள் மற்றும் மூலப் பொருட்களை வழங்குவதற்கு அமெரிக்கா முழுஅளவில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளேன். எங்களுக்கான இக்கட்டான நேரத்தில் இந்தியா உதவியாக இருந்தது. அவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம் என தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்