Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவேக்கிற்கு மரியாதை: மத்திய அரசு திட்டம்

ஏப்ரல் 26, 2021 11:02

நடிகர் விவேக் மறைந்த உடனேயே, இது குறித்து பிரதமரிடம் தகவல் தெரிவித்துள்ளார், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். இதையடுத்து, விவேக் மறைவுக்கு, பிரதமர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

'விவேக், ஒரு நடிகராக இருந்தாலும், சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார்; எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்' என, அமைச்சரும், பிரதமரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர். 'இது குறித்து விரைவில் ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள்' என, அமைச்சரிடம், பிரதமர் கூறியுள்ளார். இரண்டு திட்டங்களுடன் தயாராக உள்ளார் பிரகாஷ் ஜாவடேகர்.

'சென்னையில் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ' கட்டடத்திற்கு விவேக் பெயரை வைக்கலாம் அல்லது விவேக் படம் போட்ட ஸ்டாம்ப் வெளியிடலாம்' என, ஆலோசனை கூறியுள்ளார். இந்த இரண்டில், ஸ்டாம்ப் திட்டம் ஒப்புதல் பெற்று, விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்