Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப் தேர்தலில் சர்ச்சை

ஏப்ரல் 16, 2019 06:12

பஞ்சாப்: கடந்த, 1984ல், பஞ்சாபின், அமிர்தசரஸ் சீக்கியர் பொற்கோவிலில், ராணுவம் நுழைந்த விவகாரத்தில், முன்னாள் பிரதமர், இந்திரா குடும்பத்தினர் மன்னிப்பு கேட்காதது, இந்த தேர்தல் வரை எதிரொலிக்கிறது.லோக்சபா தேர்தல் பிரசாரம், இங்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.  

ஆளும், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி, பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன.இதன் ஒரு கட்டமாக, காங்., முதல்வர் அமரீந்தர் சிங், 'டுவிட்டர்' பதிவு ஒன்றில், மத்திய அமைச்சர், ஹர்சிம்ரத் கவுரின் தாத்தாவை விமர்சித்தார்.' 

கடந்த, 1919ல், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாளில், அதற்கு உத்தரவிட்ட, ஜெனரல் டயர் என்ற, ஆங்கிலேயனுடன், உங்கள் தாத்தா, சர்தார் சுந்தர் சிங் மஜிதியா, இரவு விருந்தில் பங்கேற்றாரே... அது நினைவில்லையா?' என, கேள்வி எழுப்பினார்.இதனால், கொதிப் படைந்த, பாதல் குடும்பம், அமரிந்தர் சிங் மற்றும் காங்., தலைவர்கள் மீது, கடும் விமர்சனங்களை வைத்துஉள்ளனர். இது குறித்து, மத்திய அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர், டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். 

'மறைந்த, இந்திரா பிரதமராக இருந்த போது, சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள், ராணுவத்தை நுழைய வைத்து, கோவிலின் புனிதத்தை கெடுத்தாரே... இதுகுறித்து, இந்திராவின் குடும்பத்தார் மன்னிப்பு கேட்காதது ஏன், என கேட்பீர்களா...' என, அவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த, 1984ல் நடந்த இந்த விவகாரம், பஞ்சாப் தேர்தலில், இப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால், இப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்