Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை

ஏப்ரல் 19, 2021 06:08

பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு, கடைசி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து இன்று (ஏப்.19) விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது. லாலு பிரசாத்தை எதிர்பார்த்து பாட்னாவில் அவரது ஆதரவாளர்கள் விரிவான வரவேற்பு ஏற்பாடுகளை செய்தனர்.

ஆனால் லாலு பிரசாத் சிறையில் இருந்து விடுதலை ஆனாலும், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது தொடரும், முழுமையாக குணமடைந்த பிறகே அவர் வீடு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர். இதய நோய், சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக லாலு பிரசாத் எய்ம்சில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தலைப்புச்செய்திகள்