Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு  

ஏப்ரல் 14, 2021 09:22

மும்பை: மஹாராஷ்டிராவில் இன்று(ஏப்.,14) முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ''அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும்'' என முதல்வர்உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்

மஹாராஷ்டிராவில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதை அடுத்து இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:கொரோனா பரவல் மிகவும் ஆபத்தான முறையில் பரவி வருகிறது. நிலைமை மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது.

தொற்றுக்கு எதிரான போரை மீண்டும் துவங்கியுள்ளோம்.மாநிலம் முழுவதும் இன்று முதல் காலை 7:00 - இரவு 8:00 மணி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் நான்கு பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை உள்ளது.ரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும். ஆனால் மிகவும் அவசியமான வேலைகளுக்கு மட்டும் மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடுகளை சமாளிக்க ராணுவ உதவியை நாடியுள்ளோம். இது குறித்து பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில்ராணுவ உதவியுடன் விமானம் வாயிலாக ஆக்சிஜன் சப்ளைக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்