Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பரபரப்பபு தகவல்: மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி

ஏப்ரல் 14, 2019 07:03

புதுடில்லி : பிரதமர் மோடிக்கு எதிராக லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிட உள்ளதாக டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என பிரியங்கா ஏற்கனவே அறிவித்துள்ளார். ரேபரேலி அல்லது அமேதியில் போட்டியிடுவீர்களா என்று பிரியங்காவை செய்தியாளர்கள் கேட்ட போது, ஏன் வாரணாசியில் போட்டியிடக் கூடாதா என்று திருப்பிக் கேட்டு அதிர வைத்தார். 

இந்நிலையில் பிரியங்காவை மோடிக்கு எதிராக நிறுத்த காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுலே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். வாரணாசி தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு மோடி 3 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலை வென்று பிரதமரானார் மோடி. 

அலகாபாத் மற்றும் வாரணாசி தொகுதிகளில் காங்.,ன் பலம் குறித்து அக்கட்சி ஆய்வு செய்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு தொகுதிகளுக்கும் காங்., இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதே போன்று உ.பி.,யில் லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில் வாரணாசி தொகுதி சமாஜ்வாதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அக்கட்சியும் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.

தலைப்புச்செய்திகள்