Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால்

ஏப்ரல் 13, 2019 12:18

சென்னை: நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 46. 

ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமநாதபுரத்தில் தங்கியிருந்தார். இன்று மதிய உணவு இடைவேளையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

ராமநாதபுரம் வீட்டில் இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளார்.   

இவர், 2009 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  

'சின்னப்புள்ள' என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து, 'நாயகன்', 'கானல் நீர்', 'பெண் சிங்கம்' உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார்.  சமீபத்தில் 'எல்.கே.ஜி' படத்தில் 'ராம்ராஜ் பாண்டியன்' என்ற நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.  

மேலும், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்திலும் முக்கிய பதவிகளில் இருந்த பல்வேறு பணிகளை செய்துள்ளார். 1973ம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்த இவர், அவரது 3 வயதில் ராமநாதபுரத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.  அவரது மறைவு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 

தலைப்புச்செய்திகள்