Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குறித்த தேதியில் துவங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வு?

ஏப்ரல் 10, 2021 07:13

சென்னை: 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதால் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3 ஆம் தேதி துவங்கும் என தெரிகிறது.  கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத என்ன வழி என்பது குறித்தும் ஆலோசனையில் விவாதித்ததாகவும் கூறப்பட்டது.   ஆனால் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதால் பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3 ஆம் தேதி துவங்கும் என தெரிகிறது. 

தலைப்புச்செய்திகள்