Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது

ஏப்ரல் 09, 2021 10:03

தஞ்சை:  தஞ்சை பெரிய கோவிலில் சித்திரைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஆனால் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

நிகழாண்டு இக்கோயிலில் சித்திரைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் கொடிமரத்தில் விழழ கொடி ஏற்றப்பட்டது.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, கோவில் வளாகத்துக்குள் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆனால் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்