Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 16 பேருக்கு மருத்துவ கல்வி உதவி 

ஏப்ரல் 08, 2021 11:07

சென்னை: கருணாநிதி அறக்கட்டளை சார்பில் வங்கியில் போடப்பட்டுள்ள வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 
2005- நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 23 லட்சத்து 90 ஆயிரம். இப்போது வட்டியாக கிடைத்த தொகையில் இருந்து மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 16 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

***

மதுரையில் 20 தெருக்கள் மூடப்பட்டன

மதுரை: மதுரை மாவட்டத்திலுள்ள 100 வார்டுகளில் கொரோனா அதிகம் பாதித்த 20 வார்டுகளை தேர்வு செய்யும் பணி இன்று தொடங்கியது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருவதையடுத்து வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

 
மதுரையில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களில் மளமளவென உயர தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து கொரோனா பரிசோதனை முகாம் நடந்து வருகிறது.

இன்று முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட டாப் 20 வார்டுகளை தேர்ந்தெடுத்து, அங்கு கொரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது

அதன்படி மதுரை மாவட்டத்திலுள்ள 100 வார்டுகளில் கொரோனா அதிகம் பாதித்த 20 வார்டுகளை தேர்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. அடுத்த படியாக கொரோனா அதிகம் பாதித்த தெருக்களை மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக களமிறங்கி உள்ளனர். இதை தொடர்ந்து 20 தெருக்கள் மூடப்பட்டன.

தலைப்புச்செய்திகள்