Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உச்சத்தை எட்டியது கொரோனா பரவல்: பிரதமர் மோடி இன்று ஆலோசனை

ஏப்ரல் 08, 2021 06:03

புதுடெல்லி: கொரோனாவின் இரண்டாவது அலை, மிக வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மராட்டியம், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். 

தலைப்புச்செய்திகள்