Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய கட்சிகளுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது: தங்க தமிழ்ச்செல்வன்

ஜனவரி 30, 2019 11:04

ஆரணி: ஆரணி அடுத்த நேத்தப்பாக்கத்தில் அ.ம.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் 4வது இடத்திற்கு செல்லும். நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறுவார்கள். 

தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது. பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அ.ம.மு.க. தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. அடுத்து ஆட்சியை நிச்சயமாக பிடிக்கும் என்று கூறி வருகிறார். ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது. 

ஜெயலலிதா, கருணாநிதி இறப்பிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தினகரன் நிரப்புவார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நிரந்தமான தலைவராக தினகரன் இருப்பார் என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்