Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மயக்கமடைந்த தொண்டருக்கு உதவிய பிரதமர் மோடி 

ஏப்ரல் 04, 2021 09:03

கவுகாத்தி:அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6- தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மே 2-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் தற்போது பிரச்சாரம் முடிவை எட்ட உள்ளது.  இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நேற்று மதிய வெயிலில் பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பா.ஜ.க.வின் அசாம் தொண்டர் ஒருவர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். 

இதை கவனித்த பிரதமர் மோடி உடனே பிரசாரத்தின் நடுவே ‘‘நமது தொண்டர் ஒருவருக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நமது அவசர உதவி மருத்துவ உதவிக்குழு எங்கிருந்தாலும் உடனே வந்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.பிரதமரின் இந்த செயல் கூட்டத்தில் கர ஒலி மற்றும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைப்புச்செய்திகள்