Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர் சேர்க்கை நடத்த தனியார் பள்ளிகளுக்கு தடை? 

ஏப்ரல் 04, 2021 07:01

சென்னை:தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட் டன. தமிழகத்தில் நர்சரி முதல் மேல் நிலைப்பள்ளிகள் வரை 10 ஆயிரத்து 500 தனி யார் பள்ளிகள் உள்ளன. சென்னையில் மட்டும் 3 ஆயிரம் பள்ளிகள் உள்ளன.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் இந்த ஆண்டு வருமான இழப்பை சரிக்கட்டுவதற்காக மாணவர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

பள்ளிக் கல்வித்துறை தற்போது மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மீண்டும் கொரோனா கட்டுப்பாடு வரலாம் என்று எதிர்பார்ப்பதால் இப்போதே மாணவர் சேர்க்கையை முடித்து விட திட்டமிட்டுள்ளார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிரபலமான அனைத்து பள்ளிகளிலும் அட்மி‌ஷனுக்காக கூட்டம் அலை மோதுகிறது.

தலைப்புச்செய்திகள்