Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கவர்னர் தமிழிசை

ஏப்ரல் 02, 2021 02:10

புதுச்சேரி:நாடு முழுவதும் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16-ந் தேதியிலிருந்து போடப்பட்டு வருகிறது முதல் கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் முன் கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி எடுத்துக் கொண்டோம் என படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஆண்டு இந்நேரத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. நாமெல்லாம் உயிரோடு இருப்போமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. நம் நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது பெருமையாக உள்ளது. பெண்களுக்கென தனி பிரிவு தொடங்கியுள்ளோம். 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடலாம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க முககவசம் அணிந்தால் 50 சதவீதம் தொற்று பரவலை தடுக்க முடியும். எனவே அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதை காவல்துறையினர் வலியுறுத்துவார்கள் என்று தமிழிசை கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்