Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனுப்புவதோ ரூ. 75 ஆயிரம் கோடி, கிடைப்பதோ ரூ. 1000 கோடி

மார்ச் 31, 2021 01:58

மேற்குவங்கம்: மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மத்திய அமைச்சர்கள் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அம்மாநிலத்திற்கு அதிகமான நிதி ஒதுக்குவதாக தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி ‘‘ஒவ்வொரு வருடமும், மேற்கு வங்காளம் மத்திய அரசுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் அனுப்புகிறது. ஆனால், அவர்கள் அம்பான் நிவாரணமான ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தருகிறார்கள்.

பா.ஜனதா தலைவர்கள் இதை போட்டி அனுப்புகிறார் எனக் கூறுகிறார்கள். இது நம்முடைய பணம். பா.ஜனதா தலைவர்களின் தந்தைகளுக்குரியது அல்ல.
 
அமித் ஷா எப்போதும் தேர்தல் பிரசாரத்தின்போது ஊடுருவல் நடக்கிறது என்கிறார். சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு அமித் ஷா தலைமையின் கீழ் உள்ள அமைச்சகம் வருவதால் யார் பொறுப்பு ஏற்பது?. அமித்ஷா, பாதுகாப்புப்படை டிஜி இதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்