Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய மந்திரி அமித்ஷா நாளை புதுவை வருகை

மார்ச் 31, 2021 09:14

புதுச்சேரி:புதுவை சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.  இடம்பெற்று தேர்தலை சந்திக்கிறது.புதுவையில் பா.ஜனதா கூட்டணி அரசு அமைய கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு  உள்ளனர் மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், ராஜூசந்திரசேகர் எம்.பி., மேலிட பார்வையாளர்  நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுவையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை செய்து  வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தேர்தல் பிரசாரத்துக்கு புதுவைக்கு வந்தார். பா.ஜனதா  தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன், கிரிராஜா  சிங் ஆகியோர் புதுவையில் பிரசாரம் செய்தனர்.இந்நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நாளை புதுவை வருகிறார்.  அவர் புதுவையில் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.

நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுவைக்கு காலை 9.30 மணிக்கு அமித்ஷா வருகிறார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருவடிக்குப்பம் சித்தானந்தா சாமி கோவிலுக்கு  அமித்ஷா செல்கிறார். அங்கு சித்தானந்தா கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

காலை 10.20 மணிக்கு சுபாஷ் சந்திரபோஸ் சிலை சதுக்கத்தில் இருந்து வீதி, வீதியாக  திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.லாஸ்பேட்டை, காமராஜர் நகர், காலாப்பட்டு தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக  பிரசாரம் செய்யும் அவர் மீண்டும் சிவாஜி சிலை அருகே பிரசாரத்தை முடிக்கிறார். 11.30  மணிக்கு விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து திருக்கோவிலூர் செல்கிறார்.

தலைப்புச்செய்திகள்