Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது

மார்ச் 30, 2021 12:30

சென்னை:தங்கம் விலை கடந்த 22-ந்தேதி பவுனுக்கு மீண்டும் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.அதன் பின் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. நேற்று தங்கம் ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 864-க்கு விற்றது.இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.328 குறைந்து ரூ.33 ஆயிரத்து 536-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4 ஆயிரத்து 192 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.68 ஆயரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு மேல் இருந்தது. அதன் பின் விலை அதிரடியாக குறைந்து கடந்த மாதம் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வந்தாலும் தங்கம் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்