Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவல் நிலையத்தில் காணாமல்போன 1400 பெட்டி மது பாட்டில்கள் எலிகள் மீது பழி போட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு

மார்ச் 29, 2021 12:24

கான்பூர் :  உத்தரப் பிரதேசம் கான்பூர் நகரக் காவல் நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் அடங்கிய 1,400 பெட்டிகள் காணாமல் போனது தொடர்பாக இரண்டு போலீஸார் மீது வழக்குப் பதிவாகி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக கடத்தப்படும் மது பாட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு, பாதுகாத்து வைக்கப்படுவது வழக்கம். இவை நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு உரியவர் அல்லது அரசுக் கருவூலங்களில் ஒப்படைக்கப்படுவது உண்டு. அதுவரை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அவை பாதுகாத்து வைக்கப்படுகின்றன.

அந்த வகையில் கான்பூர் நகரக் காவல் நிலையத்திலும் மது பாட்டில்கள் பல பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன.இவற்றின் எண்ணிக்கையை திடீரெனச் சோதனை செய்தபோது அவற்றில் 1,400 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்கள் மாயமானது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதன் பொறுப்பாளர்களைக் கேட்டபோது அவற்றை எலிகள் சேதப்படுத்தி விட்டதாகக் கூறியுள்ளனர். இதை நம்பாத போலீஸார், அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் இந்திரேஷ்பால் சிங் மற்றும் எழுத்தரான ரிஷால்சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.தற்போது காணாமல் போன மது பாட்டில்களின் எண்ணிக்கை பல ஆயிரம் ஆகும். இதனால், சிறிதும் நம்ப முடியாத இந்தத் தகவல், உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்