Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டில்லி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

மார்ச் 29, 2021 12:20

புதுடெல்லி :  டில்லியில், துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்தார்.நம் நாட்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அரசு என்பது, முதல்வர் தலைமையிலான அமைச்சரவையை குறிக்கும். இந்நிலையில், டில்லியில் அரசு என்பது, துணை நிலை கவர்னரை குறிக்கும் என்பதற்கான மசோதாவை, சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

பார்லிமென்டில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இரண்டு சபைகளிலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஆம் ஆத்மி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்தார். இது, டில்லியில், துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வழிவகுத்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்