Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க.மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரம்

மார்ச் 24, 2021 05:01

திருநெல்வேலி:மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எண்ணிப்பார்த்து, தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு  திருநெல்வேலியில் பா.ஜ.க.மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். அ.தி.மு.க. தலைமையிலான, தேசிய முற்போக்கு கூட்டணியில், பா.ஜ.க.வின், மாநில துணை தலைவரும், தமிழக முன்னாள் அமைச்சருமான, நயினார் நாகேந்திரன்  திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில், பா.ஜ.க.வின் அதிகாரப் பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார். அதனையொட்டி, நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள,  52, 54 மற்றும் 55 ஆகிய வார்டுகளில், வாக்குகள் சேகரித்தார்.

கண்டியப்பேரி, உழவர்சந்தை, பாஸ்கர தொண்டைமான் தெரு,  பாறையடி, ரகுநாதபுரம் மற்றும் கோட்டையடி ஆகிய இடங்களில், வேனில் நின்றபடியே பிரச்சாரம் செய்த நயினார் நாகேந்திரன் தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும், மத்திய, மாநில அரசுகள் செய்துள்ள, நல்ல பணிகளை, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி  வாக்காளர்கள் எண்ணிப்பார்த்து அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  இந்த பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க.நெல்லை பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கிடாசலம், மோகன், தச்சை மாதவன் உட்பட, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்