Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெற்றியை நோக்கிய பயணத்தில் டி.கே.ஜி.நீலமேகம்

மார்ச் 23, 2021 03:36

தஞ்சாவூர் : தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி நீலமேகம். இவர் மறைந்த டி.கே கோவிந்தன் என்பவரின் மகன். டி.கே.கோவிந்தன்  கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்ததோடு மிசாவி லும் கைது செய்யப்பட்டவர். டி.கே.ஜி.நீலமேகமும் ஆரம்ப காலம் முதலே தி.மு.க-வில் இருந்து வருவ தோடு இளைஞரணியில் பல பொறுப்புகளை வகித்தவர். தற்போது தஞ்சை மாநகரத்தின் செயலாளராகவும் உள்ளார்.

தனது தொகுதி மக்களின் குறை களை கேட்டறிந்து அதை உடனுக் குடன் தீர்த்து தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதால் தொகுதி மக்க ளிடம்  நீலமேகத்திற்கு நல்ல வர வேற்பு இருந்ததையடுத்து இந்த முறையும் அவருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக முன்னாள் அமைச் சரும் கழக மாநில வர்த்தகர் அணி தலைவருமான  உபயதுல்லாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று தனது அடுத்தக்கட்ட பணிகளை தொடங்க ஆரம்பித்தார் நீலமேகம். 

இந்தமுறையும் அவர் வேட்பா ளராக தேர்வு செய்தது குறித்து கூறும்போது, என்னை இரண்டாவது முறையாக தஞ்சை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகத் தேர்ந் தெடுத்து அறிவித்த தலைவர் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் அனைவ ருக்கும் நன்றியைத் தெரி வித்து கொள்கிறேன்.  பத்தாண்டு கால அடிமை ஆட்சியை தூக்கி யெறிய, தமிழகம் சிறக்க, கழகத் தலைவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க ஓய்வின்றி உழைப்போம் என்று கூறிய அவர், வாக்கு கேட்டு செல் லும் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் காட்டுகின்ற அன்பும் வரவேற் பும் அவர்கள் மாற்றத்திற்கு தயாராகி விட் டதை காட்டுகிறது என்று கூறினார்.

தேர்தல் களத்தில் கம்பீரமாக இறங்கி பிரசாரம் செய்துவரும் நீல மேகம் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ள அனைத்து வாக்குறுதி களையும் மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிக்கிறார். தஞ்சாவூர் மக்கள் சாதி, மதம் கடந்து நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த் தார்கள். ஏழை, எளிய மக்களிடத்தில் எளிதில்  பழக்கூடியவராக விளங்குகிறார் டி.கே.ஜி.நீலமேகம். 

அதோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அதே தொகுதியில் அவரு க்கு மீண்டும் போட்டியிட போட்டி யிட வாய்ப்பு கிடைத்ததால் வெற்றி என்று உறுதி செய்யப்பட்டது என்றே கூறுகிறார்கள் அத்தொகுதி மக்கள். அவர் தனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததுதான் அவருக்கு இப் போதும் வாய்ப்பு கிடைக்க காரணம் என்கிறார்கள். 

தலைப்புச்செய்திகள்