Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரபேல் ஆவணம் குறித்து விசாரணை: சுப்ரீம் கோர்ட்

ஏப்ரல் 10, 2019 06:27

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் குறித்த ஆவணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரான்சிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குற்றஞ்சாட்டி வருகின்றன. 

இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், 'ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், மனு தாக்கல் செய்துள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்