Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இ.பி.எஸ்-யை ஆதரித்து வரும் 24-ந்தேதி ஓ.பி.எஸ் பிரசாரம்

மார்ச் 21, 2021 10:26

சென்னை:துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் கட்ட பிரசாரம் செய்துவரும் நிலையில் தற்போது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி முதல் தொடங்க உள்ளார்.கொங்குமண்டலத்தில் சுற்றுப்பயணம் செய்து அவர் பேசும் வகையில் பிரசார நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் 2-ம்கட்ட சுற்றுப்பயண விவரம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:23-ந்தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் ,உடுமலை ராதாகிருஷ்ணன் , எம்.எஸ்.எம்.ஆனந்தன் (பல்லடம்), சி.மகேந்திரன் (மடத்துக்குளம்), அமுல் கந்தசாமி (வால்பாறை), தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் (தாராபுரம்) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்தும் (தொண்டாமுத்தூர் தொகுதி) அம்மன் கே.அர்ஜுனன் (கோவை வடக்கு), அருண்குமார் (கவுண்டம்பாளையம்), ஜெயராம் (சிங்காநல்லூர்), கந்தசாமி (சூலூர்), வானதி சீனிவாசன் (பா.ஜனதா-கோவை தெற்கு) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று ஏ.கே. செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), கப்பச்சி வினோத் (குன்னூர்), பொன் ஜெயசீலன் (கூடலூர்), போஜராஜன் (பா.ஜனதா- ஊட்டி) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

அதன்பிறகு திருப்பூர் சென்று சபாநாயகர் தனபாலை ஆதரித்து (அவினாசி தொகுதி) பேசுகிறார். அதே இடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜய குமார் (திருப்பூர் வடக்கு), குணசேகரன் (திருப்பூர் தெற்கு), ராமலிங்கம் (காங்கயம்) ஆகியோரை ஆதரித்தும் பேசுகிறார்.இதன்பிறகு ஈரோடு சென்று அமைச்சர்கள் செங்கோட்டையன் (கோபி செட்டிபாளையம்), கே.சி. கருப்பணன் (பவானி), கே.வி. ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), ஜெயக்குமார் (பெருந்துறை), பண்ணாரி (பவானிசாகர்), சண்முகவேல் (அந்தியூர்) ஆகியோரை ஆதரித்தும் ஈரோடு கிழக்கு தொகுதி த.மா.கா. வேட்பாளர் யுவராஜா, மொடக்குறிச்சி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் சரஸ்வதி ஆகியோரை ஆதரித்தும் பேசுகிறார்.

24-ந்தேதி மாலை 4 மணிக்கு எடப்பாடி தொகுதிக்கு சென்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பேசுகிறார். அங்கேயே சங்ககிரி வேட்பாளர் சுந்தரராஜன், ஓமலூர் வேட்பாளர் மணி, பா.ம.க. மேட்டூர் தொகுதி வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.அங்கிருந்து சேலம் சென்று சேலம் வடக்கு தொகுதி வேட்பாளர் வெங்கடாசலம், தெற்கு தொகுதி பாலசுப்பிரமணியன், வீரபாண்டி தொகுதி ராஜமுத்து, ஏற்காடு தொகுதி சித்ரா, ஆத்தூர் ஜெயசங்கரன், கங்கவல்லி, நல்லதம்பி மற்றும் சேலம் மேற்கு த.மா.கா. வேட்பாளர் அருள் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

பின்னர் தருமபுரி சென்று அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்தும் (பாலக்கோடு) பேசுகிறார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி (பென்னாகரம்), தருமபுரி வெங்கடேஸ்வரன் மற்றும் அரூர் சம்பத்குமார், பாப்பி ரெட்டிபட்டி கோவிந்தசாமி ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். கிருஷ்ணகிரியில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அசோக்குமார் (கிருஷ்ணகிரி) பர்கூர் கிருஷ்ணன், ஊத்தங்கரை தமிழ்செல்வம், ஓசூர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, தளி பா.ஜனதா நாகேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

வாணியம்பாடியில் அமைச்சர் கே.சி.வீரமணி, செந்தில்குமார், நஜீர் முகமது, பா.ம.க. வேட்பாளர் ராஜா ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.25-ந்தேதி பள்ளி கொண்டா பகுதியில் வேட்பாளர்கள் வேலழகன், பரிதா, ஜெகன் மூர்த்தி (புரட்சிபாரதம்) ஆகியோரை ஆதரித்து, வேலூரில் அப்பு, காட்பாடி ராமு ஆகியோரை ஆதரித்தும், ராணிப்பேட்டையில் அரக்கோணம் ரவி, ராணிப்பேட்டை சுகுமார், சோளிங்கர் கிருஷ்ணன், ஆற்காடு இளவழகன் ஆகியோரை ஆதரித்தும் பேசுகிறார்.

ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு தூசிமோகன், கலசபாக்கம் பன்னீர் செல்வம், வந்தவாசி முரளி சங்கர் ஆகியோரை ஆதரித்தும், திருவண்ணா மலையில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, நயினாகண்ணு, தணிகைவேல் (பா.ஜனதா), செல்வகுமார் (பா.ம.க.) ஆகியோரை ஆதரித்தும் பேசுகிறார்.

தலைப்புச்செய்திகள்