Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி தீவிர பிரச்சாரம்

மார்ச் 20, 2021 12:50

திருச்சி : தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோயில்  வழிபாடு செய்து பின்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நெல்சன் ரோடு, சிங்கபெருமாள் கோயில்,   நரியன் தெரு, பர்மா காலனி  உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக,வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.அவருக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்தப் பிரச்சாரத்தில் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார்,சிங்காரம், குடமுருட்டி சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்