Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம்

மார்ச் 20, 2021 12:46

திருச்சி  : தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சமயபுரம், பிச்சாண்டார் கோயில், புதுதெரு, அக்ரகாரம், கள்ளதெரு,   பழுர், கூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்தப் பிரச்சாரத்தில் DSP இளங்கோவன், செந்தில் குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரும்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்