Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேப்பனஹள்ளி தொகுதிக்கு சமூக ஆர்வலர் வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு

மார்ச் 20, 2021 12:45

கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு  நேற்று முதல் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் சூளகிரி அடுத்த அத்திமுகம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல்அஜிஸ் அமானுல்லா சுயேட்சையாக சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் கோபுவிடம்  வேட்புமனு தாக்கள் செய்தார்.

மாவட்டம் முழுவதும் சமூக பணியாற்றி, பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று, கடந்த 2016 -ம்வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது இவர் வேட்புமனு தாக்கல் செய்வதை திமுகவினர் தடை செய்து அப்போதைய வேட்பாளரும், தற்போதைய வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான முருகன் தனக்கு ஆதரவு தருமாறு கோரினார். இதனால் சமூக ஆர்வலர் அமானுல்லா அவருக்கு ஆதரவளித்து வேப்பனஹள்ளி தொகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களின் வாக்குகளை முருகனுக்கு பெற்றுத் தந்தார்.

இந்த நிலையில் தற்போது வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி,  வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த நிலையில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் கடந்த பத்து வருடங்களாக இலவச மருத்துவ அறக்கட்டளை அமைத்து 10- ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு  இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்தும்,  கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒருவருடமாக தனது சொந்த செலவில் மருத்துவ வாகனம் அமைத்து,  மருத்துவ குழுவினரை அழைத்துக்கொண்டு நேரடியாக கிராமங்களுக்குச் சென்று மாவட்டம் முழுவதும் அமானுல்லா சிகிச்சை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் வேப்பனஹள்ளி தொகுதியில் இலவச மருந்துஅங்காடி, இலவச ஆம்புலன்ஸ் வசதி,  அமரர் ஊர்திவசதி,  மருத்துவத் தேவைகள் உள்ளிட்டவைகளை நிறைவேற்றி தற்போது விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளையும்,  பூக்களையும் நல்ல விலைக்கு விற்பனை  செய்ய ஏதுவாக செயல்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரை பெற்று வரும் அமானுல்லா வேட்புமனு தாக்கல் செய்திருப்பது ஆளும் கட்சியினருக்கும்,   எதிர்க்கட்சியினருக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்