Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரம்பலூாில் முககவசம் அணியாத 139 பேருக்கு அபராதம்

மார்ச் 20, 2021 09:30

பெரம்பலூர்: கொரோனா வைரஸ் மீண்டும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதனை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிருது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணிய தவறும் பொதுமக்களுக்கு தலா ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறும் பொதுமக்களுக்கு தலா ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் மூலம் முககவசம் அணியாத நபர்களிடம் அபராத தொகையாக கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை 139 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.27 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 பேரிடம் அபராதமாக தலா ரூ.500 வீதம் ஆயிரத்து 500 ரூபாயும் என மொத்தம் 142 பேரிடம் ரூ.29 ஆயிரத்து 300 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்