Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பூர்வாஞ்சல் ஜனதா கட்சியின் (மதசார்பற்ற) வேட்பாளர் கேசவ் யாதவ்

ஏப்ரல் 09, 2019 01:34

புது டில்லியை தலைமையிடமாக கொண்ட பூர்வாஞ்சல் ஜனதா கட்சியின் (மதசார்பற்ற) சார்பாக இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் களம்  காண்பவர்தான் கேசவ் யாதவ். இராமநாதபுரத்தை பொறுத்தரவை நயினார் நாகேந்திரன் (பாஜக), நவாஸ் கனி (இ.யூ.மு.லீக்), வது.ந ஆனந்த்  (அமமுக), கேசவ் யாதவ்  (பூ.ஜ.கட்சி - மதசார்பற்ற), விஜயபாஸ்கர் (மநீம), புவனேஸ்வரி (நாம் தமிழர்) ஆகிய முக்கிய வேட்பாளர்களும், சுயேட்சைகளும்  போட்டியிடுகிறார்கள்.  

இதில் ஒரு கல்வியாளராக களம் இறங்குபவர்தான் கேசவ் யாதவ். சென்னை அருகே காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும்  அவர் நடத்தும் 2 கல்லூரிகளில் படித்த மாணாவர்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்வேறு முக்கிய பணிகளில் இருக்கிறார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு மாவட்டமாக இருப்பது இராமநாதபுரம் மாவட்டம். 

பூர்வாஞ்சல் ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருக்கும் கேசவ் யாதவ், தனது கட்சியால் ஜனாதிபதி வேட்பாளருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தடுத்து தமிழகத்தில்  நடைபெறவுள்ள தேர்தல்களில் உள்ளாட்சி தேர்ததல்களில் தொடங்கி சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திற்கும் வேட்பாளர்களை  நிறுத்த வேண்டிய பொறுப்புகளும் கேசவனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரத்தில் களம் இறங்கும் கேசவன் யாதவ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை  தீர்க்க வழிவகை செய்யப்படும் என்று கூறியுள்ளார். இராமநாரத்தை பொறுத்தவரை தற்போது  உள்ள மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று  தண்ணீர் பிரச்சனை. 

கடந்த 3 ஆண்டுகளாக பருவமழையும் பொய்த்துவிட்டதால், நிலத்தடி நீரின் அளவும் வற்றிவிட்டது. இதனால் ஒவ்வொரு கோடையிலும்  தண்ணீரைத் தேடி அலைவது வாடிக்கையாகிவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் குடிநீருக்காக தினமும் 10  கி.மீ. தூரம் செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது.  

கிட்டத்த 120 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் தினமும் குடிநீருக்காக பிரத்யேகமான தள்ளுவண்டிகளில் குடங்களைத் வைத்து தண்ணீர்  பிடிப்பதற்காக அலைகின்றனர். கிலோ மீட்டர்கள் கணக்காக நடந்துவந்தும் தண்ணீருக்காக மற்றவர்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக வெயிலில்  காத்திருக்க வேண்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

அதோடு இரவு நேரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலை ஓரமாக திரும்பி வரும்போது அவ்வப்போது விபத்துக்களும் நடப்பதோடு,  உயிர் பலியும் எற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாக்கு சேகரிக்க திராவிட கட்சிகள் வரும்போது, எங்கள் தண்ணீர்  பிரச்சனையை தீர்த்தால்தான நாங்கள் ஊருக்குள் விடுவோம் என்று கூட சில பகுதிகளில் பிரச்சனைகள் நடந்துவருகிறது. இந்த பிரச்சனையை  பற்றி தெளிவாக ஆராய்ந்த கேசவ் யாதவ், தான் வெற்றிப் பெற்றால் முதலாவதாக தண்ணீர் பிரச்சனையை முழுவதுமாக தீர்த்துவிடுவேன்  என்று கூறியுள்ளார்.  

அதாவது, கடல் நீரை நன்னீராக்கி மக்களுக்கு குடிநீராக கொடுக்கும் புதிய திட்டம், உச்சுப்புளி விமான நிலையத்தில் பயணிகள் விமான  சேவை, மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, திருவாடனை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் தெ £ழில் வாய்ப்பு உருவாக்குவது, ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தை உருவாக்குவது, முதுகுளத்தூரில் வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனு க்காக அவர்களை தொடர்பு கொள்ளவும், பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணவும் அரசின் உதவி மையம் நவீன முறையில் அமைப்பது  என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கொடுக்க முடியும் என்று அந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.  

ஒரு கல்வியாளர் இராமநாதபுரத்தில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதால் அவர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் மிகுந்த  வரவேற்பு காணப்படுகிறது. பல்வேறு கிராமங்களில் கிராம மக்களை ஒன்றிணைத்து தற்போதுள்ள பிரச்சனைகளுக்கான காரணங்கள், அதை  தீர்ப்பதற்கான வழிமுறைகள் என அனைத்தும் தெளிவாக பேசி வாக்கு சேகரித்து வருகிறார். 

அவரிடம் பேசும் அந்தத் தொகுதி மக்கள், நாங்களும் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால் திராவிடக் கட்சிகள் ஓட்டுக்கேட்க வரும்போது  மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வாரிவிட்டு செல்கிறார்கள். நாங்களும் நம்பி ஓட்டு போடுகிறோம். ஆனால் ஜெயித்தவுடன் நன்றி  தெரிவிப்பதாக கூறி ஊருக்குள் வருகிறார். அவ்வளவுதான். அதன்பிறகு 5 வருசம் கழிச்சுதான் வந்து பேசுகிறார். 

அதனால எங்கள் பிரச்சனைய  தீர்ப்போம்னு தீர்க்கமா வாக்குறுதி கொடுத்து, நிறைவேற்றுவார்னு எங்களுக்கு யார் மேல நம்பிக்கை இருக்கோ அவங்களுக்கே எங்கள் ஓட்டு  என்று கூறி, கேசவ் யாதவிடம் கூறியதோடு, நீங்கள் ஒரு கல்வியாளர், அதனால் நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்