Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து மதத்திற்கு திமுக விரோதி அல்ல: ஸ்டாலின்

ஏப்ரல் 09, 2019 08:46

திருநெல்வேலி:  திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு பின் பா.ஜா.க செல்வாக்கு சரிகிறது. விரைவில் ராகுல் பிரதமராக பதவியேற்பார் என அறிவித்தேன். இதனை பா.ஜா.க எதிர்பார்க்கவில்லை.  

இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரியல்ல. கருணாநிதி கோயில் சொத்துகளை மீட்டு கொடுத்தார்.கோவில் நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்ய கூடாது என கூறியவர் கருணாநிதி. கோயில்களின் வருமானத்தை அதிகரிக்க செய்தார். ஆனால், சிலர் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என விமர்சனம் செய்கின்றனர். தவறான பிரசாரம் செய்கின்றனர். திமுக இந்து விரோத கட்சி என்றால், திமுகவில் இருப்பவர்கள் யார்? இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்