Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து நீக்கம்

மார்ச் 18, 2021 12:42

கொல்லிமலை:நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரசேகரன். இவர் இந்த தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். கட்சி தலைமை இவருக்கு பதிலாக எஸ்.சந்திரன் என்பவரை நிறுத்தியது.இதனால் அதிருப்தி அடைந்த சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் கொல்லிமலையில் ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த நிலையில் அவர் சுயேச்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளார்.

இதையடுத்து சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சின்னகார வள்ளியில் தேர்தல் அலுவலகம் திறந்தார். இதனிடையே அவர் தேர்தலில் போட்டியிடும் தனக்கு சிலர் பிரச்சனை செய்யக்கூடும் என்றும், பிரசாரத்தின் போது அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் மற்றும் எஸ்.பி. சக்திகணேசன் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தார். இதை தொடர்ந்து இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து மனுதாக்கல் செய்தார்.

தொகுதி தேர்தல் அலுவலர் ரமேஷிடம் மனுவை வழங்கினார்.எம்.எல்.ஏ சந்திரசேகரன் தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரனை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்