Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக ஆட்சியில் சில நல்ல திட்டங்கள்  நடந்தது ஸ்டாலின் புத்தியால் 

மார்ச் 17, 2021 09:15

அரியலூர் : அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா கலந்துகொண்டு திமுக கூட்டணியில் அரியலூர் வேட்பாளராக போட்டியிடும் மதிமுகவை சேர்ந்த சின்னப்பாவை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அதிமுக ஆட்சியில் கடந்த சில மாதங்களில் சில நல்ல விஷயங்கள் நடந்தது என்றால் அது திமுகவின் தலைவர் சொன்னதால் மட்டுமே. 

திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார்.திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா  நிவாரண நிதியாக 5000 தரப்படும் என ஸ்டாலின் கூறினார். உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி 2500 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதேபோல் 10 சதவீத இட ஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தவுடன் 

எடப்பாடி பழனிச்சாமி 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த உடன் உச்சநீதிமன்றத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என கூறிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதைதான் செய்து வருகிறார்.

எனவே இது எடப்பாடி பழனிச்சாமி செய்தது சொந்த புத்தியால் அல்ல திமுக தலைவர் ஸ்டாலின் தந்த புத்தியால் மட்டுமே  ஒரு சில நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என பேசினார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை ஒருநாளும் ஏற்றுக் கொண்டதில்லை.  அதனால்தான் நீட்,  உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்டவை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால் தமிழக முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மாநில அரசின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டார். அதனால் தான் தற்போது நீட், ஜிஎஸ்டி, உதய் மின் திட்டம் ஆகியவை தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் உச்சநீதிமன்றத்தால் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக ஊழல் செய்தவர் ஜெயலலிதா என வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் விட்டுத் தராத ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமியால் தரமுடியாது. வேறு எப்படி ஜெயலலிதாவின் ஆட்சியை தருவோம் என்கிறார்கள் என்றால் ஜெயலலிதா போல் ஊழல் செய்வோம்,  மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல் படுத்துவோம் என்பதை மறைமுகமாக கூறி வருகிறார்கள். 

இதனை திமுக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மாநில சுயாட்சிக்கு வித்திடும் வகையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்