Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக வாக்குறுதிகளை காப்பி அடிக்கிறது அதிமுக

மார்ச் 17, 2021 08:47

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் காந்திராஜன், நத்தம் தொகுதியில் ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான்.திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை அப்படியே அதிமுக காப்பி அடிக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அதிமுக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளது.என்று மு.க.ஸ்டாலின்   கூறினார்.

தலைப்புச்செய்திகள்