Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்- கல்வித்துறை அறிவிப்பு

மார்ச் 16, 2021 06:34

சென்னை:கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10 மாதங்களுக்கும் மேல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அரசு, தனியார் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டன.9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிளஸ் 2 வகுப்பைத் தவிர்த்து பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான வகுப்புகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கற்றல்- கற்பித்தல் பணிகளை வழக்கம் போல் மேற்கொண்டு வருகின்றனர்.

9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை. இது குறித்து பரவும் தகவல்களை மாணவர்கள், பெற்றோர் நம்ப வேண்டாம்.இந்த வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடப்பகுதிகளை திறம்பட நடத்துவது அவசியம். அதனால் பள்ளிகளில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்கள்.

தலைப்புச்செய்திகள்