Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடாது: ஜி.கே.வாசன்

மார்ச் 14, 2021 07:12

சென்னை: அதிமுக வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கைக்கு முன்பு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை எடுபடாது, அதாவது திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலுக்காக, வாக்குக்காக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக வெளிவந்திருக்கும் அறிக்கை என்பதால் பொது மக்கள் நம்ப மாட்டார்கள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலுக்காக, வாக்குக்காக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக வெளிவந்திருக்கும் அறிக்கை என்பதால் பொது மக்கள் ஏமாற மாட்டார்கள். காரணம் அதிமுக ஆட்சியில் நடைபெறும் மக்கள் நலன் திட்டங்களையும், வெளிவந்திருக்கும் அறிவிப்புகளையும் மக்கள் நன்கு அறிவார்கள். திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடம் எடுபடாது. 

தமிழக அரசு அறிவிக்கப்போகின்ற தேர்தல் அறிக்கையை தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதாவது விவசாயிகளுக்காக, பெண்களுக்காக, பொது மக்களுக்காக ஏற்கனவே தமிழக அரசின் அறிவிப்புகளால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள். அந்த வகையில் தமிழக அரசு இன்னும் வெளியிடப்போகும் அறிவிப்புகளையும், தேர்தல் அறிக்கையையும் மக்கள் நம்புவார்கள்.

அதே சமயம் திமுகவானது மக்கள் மனதை கவர்ந்தால் போதும், வாக்குகளை வாங்கினால் போதும், வெற்றி பெற்றால் பார்த்துக்கொள்ளலாம் என்று உள் ஒன்று வைத்து புறம் ஒன்று அறிவித்திருப்பதை வாக்காளர்கள் நம்பத்தயாராக இல்லை. இந்நிலையில் தமிழக அரசின் நல்லாட்சி தொடர திமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கை எவ்விதத்திலும் தடையாக இருக்க முடியாது.

அது மட்டுமல்ல அதிமுக வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கைக்கு முன்பு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை எடுபடாது. அதாவது திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலுக்காக, வாக்குக்காக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக வெளிவந்திருக்கும் அறிக்கை என்பதால் பொது மக்கள் நம்ப மாட்டார்கள். காரணம் அதிமுக ஆட்சியில் நடைபெறும் மக்கள் நலன் திட்டங்களையும், வெளிவந்திருக்கும் அறிவிப்புகளையும் மக்கள் நன்கு அறிவார்கள் என்பதை தமாகா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்