Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல்

மார்ச் 10, 2021 02:02

கொல்கத்தா:மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரை பாரதீய ஜனதா கட்சி தன் பக்கம் இழுத்து அவர்களுக்கு டிக்கெட் வழங்கி இருக்கிறது.மம்தா பானர்ஜியிடம் நீண்டகாலமாக முக்கிய உதவியாளராக சுவேந்து அதிகாரி இருந்து வந்தார். அவர் கடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் திடீரென விலகிய அவர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு நந்திகிராம் தொகுதியில் பாரதீய ஜனதா டிக்கெட் வழங்கியுள்ளது.சுவேந்து அதிகாரி தனது தொகுதியில் மம்தா போட்டியிட தயாரா என்று சவால்விட்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி நந்திகிராமில் போட்டியிட முடிவு செய்தார். மம்தா பானர்ஜி இதற்கு முன்பு பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதற்காகவே நந்திகிராம் தொகுதியை தேர்வு செய்தார். இன்று அவர் அங்கு வேட்பு மனுதாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அவர் நந்திகிராமில் பிரசாரம் மேற்கொண்டார்.சுவேந்து அதிகாரி 12-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.அவர் மம்தாவை வெளியூர்காரர் என்று விமர்சித்து உள்ளார். அதற்கு மம்தா நான் வங்கத்துப் பெண். மேற்கு வங்காளத்தில் அனைத்து ஊரும் எனக்கு சொந்த ஊர்தான் என்று கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்