Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் தேர்வு

மார்ச் 10, 2021 12:56

திருநெல்வேலி : மொத்தம் உள்ள, 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில், தேர்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த  தொகுதிகள் அனைத்துக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, சுழற்சி முறையில், தேர்வு செய்யும் பணி பாளையங்கோட்டை வட்டம், கொக்கிரகுளத்தில் நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இதனை துவக்கி வைத்தார். ஒவ்வொரு தொகுதிக்கும், ஈ.வி.எம்.எனப்படும்,  வாக்குப்பதிவு எந்திரங்கள், 120 சதவிகிதமும், கண்ட்ரோல் யூனிட் எனப்படும்,  கட்டுப்பாட்டு எந்திரங்கள், 120 சதவிகிதமும், வாக்குப்பதிவினை சரி பார்க்கக் கூடிய, வி.வி.பேட் எந்திரங்கள் 133 சதவிகிதமும், அனுப்பி வைக்கப்படுவதாக, இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் செலவினங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர், விளக்கம் அளித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சார் ஆட்சியர்கள் திருநெல்வேலி வி.சிவகிருஷ்ண மூர்த்தி, டாக்டர் பிரதீக்தய்யாள், மாநகராட்சி ஆணையாளர் ஜி. கண்ணன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்