Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாக்டர் அகர்வால் கண் உலக கண்நீர் அழுத்த நோய் தினம்

மார்ச் 09, 2021 02:37

திருநெல்வேலி : பாளையங்கோட்டை வட்டம், வண்ணார் பேட்டையில், உலக கண்நீர் அழுத்த நோய் தினம் கடைபிடிக்கப்பட்டது.உலக சுகாதார நிறுவனம்  வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம், இரண்டாவது வாரத்தில், உலக கண்நீர் அழுத்த நோய் வாரவிழா, உலக நாடுகள் முழுவதிலும், 2004- ஆம் ஆண்டு முதல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 நெருங்கிய உறவில் திருமணம் புரிதல் மற்றும் குடும்ப பாரம்பரியம் போன்றவையே, கண்நீர் அழுத்த நோய்க்கான,  அடிப்படைக்காரணம் ஆகும்.முற்றிலும் பார்வையை இழக்கச்செய்திடும் திறன் பெற்ற, இந்நோய் குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்திடும், கடந்த 16 ஆண்டுகளாக, கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், வண்ணார் பேட்டையில் உள்ள, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் நடைபெற்ற, கண்நீர் அழுத்த நோய்  விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி.ஏ.நசீர் அகமது, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இலவச கண்நீர் அழுத்த நோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாமினை துவக்கி, வைத்து,  அது தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியினையும் பார்வையிட்டு, அதனை வெகுவாக பாராட்டினார்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் பங்கேற்று, முதல் நான்கு இடங்களை பிடித்த, பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது பேசிய நீதிபதி நசீர் அகமது, ஆன் லைன் வகுப்புகளுக்காக,  செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றிலேயே காலம் கழித்து வரும், மாணவ, மாணவிகள், அடிக்கடி தங்களுடைய கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளுக்கு, அவ்வப்போது தக்க அறிவுரைகள் வழங்கி, அவர்களையும், அவர்களுடைய கண்களையும், பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.நிகழ்ச்சிக்கு டாக்டர் அகர்வால் கண்மருத்துவ மனையின், கண்வங்கி ஒருங்கிணைப்பாளர் வேலு, தலைமை வகித்தார். மருத்துவ மனையின்,  மருத்துவ அலுவலர் டாக்டர் பிரேம்குமார், அனைவரையும் வரவேற்றும் பேசினார். நிறைவாக, மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் அகிலன், அனைவருக்கும் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்