Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தேர்தல் விழிப்புணர்வு 

மார்ச் 07, 2021 02:59

தூத்துக்குடி :100 சதவீத வாக்களிக்க பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற  நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்கள் 100 சதவீதம்  வாக்களிக்க வேண்டும், தங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில் தூத்துக்குடி கடற்கரை சாலை ரோச் பூங்கா முன்பு பொதுமக்களுக்கு 100 சதவீதம்  வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் ஸ்கேட்டிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் துவங்கி வைத்தார். 
மேலும் மகளிர் குழு பெண்கள் கலந்துகொண்டு 100 சதவீதம்  வாக்களிக்க வேண்டும் தங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் குழு பெண்கள் கலந்துகொண்டு தங்கள் எண்ணங்களை வண்ணகோலங்களாக வரைந்தனர்.

இந்தகோலப் போட்டியை  பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சிறந்த கோலங்களை தேர்வு செய்து அதற்கு பரிசு வழங்கினார்.இதைத்தொடர்ந்து ரோஜா பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டு அவர்களிடம் தங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல அனைவரும் வாக்களிப்போம் என வலியுறுத்தி கையெழுத்து நடைபெற்றது. 

இந்த  நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சிம்ரன் சித் சிங், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன். தாசில்தார் ஜஸ்டின். செல்லத்துரை. குடிமை பொருள் தாசில்தார் வனதா .வருவாய் ஆய்வாளர் பழனி குமார். கிராம நிர்வாக அதிகாரி பாத்திமா ராணி. உதவியாக உதவியாளர் விஜய மூர்த்தி, கணேசமூர்த்தி மற்றும் சரகலை பயிற்சி பள்ளி இயக்குனர் முபாரக் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்