Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்குப்பதிவை எந்திரம் பற்றி தவறான தகவல் பரப்பினால் ஜெயில்

ஏப்ரல் 07, 2019 11:18

ஊத்துக்கோட்டை: பதட்டமான வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி  ஊத்துக்கோட்டையில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் உள்ள பதட்டமான 2 வாக்குச் சாடிகளை பார்வையிட்டார். 

பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்டத்தில் மொத்தம் 3603 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை. இதில் 9 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை. இந்த பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம். 

இந்த வீரர்கள் இம்மாதம் 13-ந் தேதியில் இருந்து வாக்கு பதிவு நாளான 18-ந் தேதி வரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதட்டமான ஒரு வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் துணை ராணுவப் படை வீரர்களை பாதுகாப்பில் பணி அமர்த்த உள்ளோம். 

வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை மாவட்டத்தில் இது வரை 3 லட்சம் பேர் சோதனை அடிப்படையில் பரிசோதித்துள்ளனர். வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

தலைப்புச்செய்திகள்