Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தோ - திபெத் எல்லையில் முதல் ஓட்டு போட்டாச்சு!

ஏப்ரல் 07, 2019 10:11

அருணாச்சல பிரதேசம்: மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் 18ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கு முன்பாகவே இந்த தேர்தலில் முதல் வாக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது.  

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த தொகுதிக்கு சென்று வாக்குப் பதிவு செய்ய முடியாது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ மற்றும் துணை ராணுவ படையினர் இரண்டு முறையில் வாக்களிக்க முடியும்.  

ஒன்று தபால் ஓட்டு மூலம் வாக்களிப்பது. மற்றொன்று தனது பிரதிநிதியாக ஒருவரைத் தேர்வு செய்து அவர் மூலமாக வாக்களிப்பது. இந்நிலையில், நாட்டிலிலேயே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் முகாம் அருணாச்சல பிரதேச மாநிலம் லோஹித்பூரில் தொடங்கியது.  

இதில் இந்தோ-திபெத் எல்லை காவல்படையைச் சேர்ந்த டிஐஜி சுதாகர் நாட்டின் முதல் வாக்கை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து 5000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதேபோல், நாடு முழுவதும் மற்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் தங்களது வாக்கை அடுத்தடுத்த நாட்களில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தலைப்புச்செய்திகள்