Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டி

மார்ச் 02, 2021 11:09

கொல்கத்தா:294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 27-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.அந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. அந்த கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 கட்சிகள் உள்ளன.இதேபோல 3-வது அணியாக இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணியிலும் 6 கட்சிகள் இடம் பெற்று உள்ளன.

தொகுதி பங்கீடு தொடர்பாக மாக்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. இதன்படி காங்கிரசுக்கு 92 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.தொகுதி பங்கீடு தொடர்பாக மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது,

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு குறித்து இடதுசாரிகளுடன் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்பட்டியல் அடுத்த 2 தினங்களில் வெளியிடப்படும்.

நாங்கள் 130 தொகுதி இடங்களை கேட்டோம். ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க இடங்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு 92 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டோம். என்று அதிர்ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

தலைப்புச்செய்திகள்