Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

மார்ச் 01, 2021 04:00

சென்னை:திமுக கட்சி கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதுது. டி.ஆர். பாலு தலைமையிலான குழு நேற்று முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின் - காதர் மொய்தீன் கையெழுத்திட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்