Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க - த.மா.கா. நாளை பேச்சுவார்த்தை

பிப்ரவரி 28, 2021 01:10

சென்னை அ.தி.மு.க. அணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.பா.ஜனதாவுடனும் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் அ.தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்து பேசினார்கள்.இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடும் இன்று அல்லது நாளைக்குள் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா.வுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேசப்படுகிறது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க உள்ளார். த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது அது உறுதி செய்யப்படும். த.மா.கா.வுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு குறைந்தபட்சம் 12 தொகுதிகள் போட்டியிட வேண்டும்.

எனவே 12 தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால் 5 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.வால்பாறை, காங்கேயம், ஈரோடு, பட்டுக்கோட்டை, திரு.வி.க.நகர் மற்றும் தென் மாவட்டங்களில் சில தொகுதிகளை த.மா.கா. கேட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்