Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேவராத்திலிருந்து சாக்குலூத்து மெட்டு செல்வதற்கான சாலையை ஆய்வு செய்த தேனி எம்.பி.

பிப்ரவரி 27, 2021 11:36

தேனி: தேனி மாவட்டம் தேவராத்திலிருந்து கேரளாவை இணைக்கும்  சாக்கலூத்துமெட்டு செல்வதற்கான சாலை வசதி அமைப்பது குறித்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:  உத்தமபாளையம் வட்டார பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேவாரத்திலிருந்து மேட்டுபட்டி வழியாக சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்கும் திட்டம் எம்.ஜி.ஆர்; காலத்தில் 4 கி.மீ சாலை அமைக்கப்பட்டது. 

அதன்பின் வனத்துறையின் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. மேலும், வியாபாரரீதியாகவும், விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், அங்கிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கும் இச்சாலை பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன் மேலும் இது குறித்து  தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீலீ;செல்வம்   வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து சாக்குலுலீத்து மெட்டு சாலை அமைப்பதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்றார்.

தலைப்புச்செய்திகள்